கொஞ்சம் மாத்தியோசி… திருமணம் முடிந்த கையோடு ஜிம்முக்கு சென்று வொர்க்அவுட் செய்து போட்டோசூட்.. கவனத்தை ஈர்த்த புதுமணத்தம்பதி..!!

Author: Babu Lakshmanan
7 March 2023, 8:37 am
Quick Share

மதுரை : வொர்க்அவுட் ஒர்க்ல ரொம்ப சின்ஷியர் ஜிம்முக்கு சென்று புஷ்அப் தண்டால் எடுத்து போட்டோ சூட் எடுத்துக்கொண்ட புதுமண ஜோடியின் வீடியோ ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மதுரை மாநகர் செல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சரவணபாண்டி. இவர் அதே பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அதே ஜிம்மில் பெண்களுக்கான உடற்பயிற்சி பயிற்சியாளராக தேனி மாவட்டத்தை சேர்ந்த அன்னலட்சுமி என்ற இளம்பெண்ணும் பணி புரிந்துள்ளார்.

இந்நிலையில், இருவரிடையே நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறிய நிலையில், இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு சம்மதம் அளித்த நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று செல்லூர் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து திருமண போட்டோ சூட் நடத்துவதை சற்று வித்தியாசமாக யோசித்த புதுமண தம்பதியினர், தாங்கள் வொர்க்அவுட்ல சின்ஷியர் என்பது தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், காதல் தொடங்கிய இடத்திலயே திருமண நாளின் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காகவும், திருமண அலங்காரத்தோடு ஜிம்முக்கு சென்றனர்.

அங்கு இருவரும் சேர்ந்து புஷ் அப் செய்தனர். மணகனின் முதுகில் மணப்பெண் அமர்ந்த நிலையில், மணமகன் தண்டால் எடுப்பது, லிப்ட் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு, அதனை போட்டோ சூட் எடுத்துகொண்டனர். இந்த போட்டோ சூட் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

வெட்டிங் சூட் என்றாலே கன்னத்தில் கை வைத்தும், பூவை பிடித்தவாறும், ஒருவர் தோளில் ஒருவர் செய்வது போன்ற பழைய டெக்னாலஜிக்குலாம் போகாமல், சற்று வித்தியாசமாக யோசித்து போட்டோ சூட் நடத்திய தம்பதியினருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 172

0

0