அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 44-பேருக்கு கொரோனா தொற்று.!!

7 May 2021, 8:49 am
Quick Share

மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று மக்களிடையே பெறும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கான புதிய நோயாளிகளும், ஆயிரக்கணக்கான மரணங்களும் அதிகரித்து வருகின்றன.

கொரோனாவின் 3-வது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் இப்போதே தயாராக வேண்டும். கொரோனா 3வது அலை குழந்தைகளை பெருமளவில் தாக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை தேவை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என 44 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இதனால், இவர்கள் பணியைத் தொடரமுடியாத நிலையில், சிகிச்சையளிக்கும் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Views: - 159

0

0