மதுரையில் இறங்குமுகமான கொரோனா…? 100க்கும் கீழே பதிவான தொற்று

5 August 2020, 9:47 am
Madurai Corona Discharge
Quick Share

மதுரை: மதுரையில் ஆறுதல் அளிக்கும் விஷயமாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 100க்கும் கீழே பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் இன்னமும் ஓயவில்லை. தொடக்கத்தில் தலைநகர் சென்னையை பதம் பார்த்தது. உச்சக்கட்டத்தில் இருந்த கொரோனா பரவலை தடுக்க பலகட்ட சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிக்கப்பட்டு, அந்த பகுதிகளுக்கு மட்டும் அதீத கவனம் செலுத்தப்பட்டது. இதையடுத்து தொடக்கத்தில் இருந்த கொரோனா வீரியம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. ஆனால் சென்னையில் இருந்த பலர் சொந்த மாவட்டங்களுக்கு படையெடுத்ததால் கொரோனா தமிழகம் முழுக்க வேகமாக பரவ ஆரம்பித்தது.

செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கடலூர் என வேகமாக கொரோனா பரவியது. தென் தமிழகத்தை பொறுத்த வரை மதுரை கொரோனா மையமாக மாறி போனது. தொடக்கத்தில் இந்த மாவட்டத்தில் கொரோனா குறைவான அளவில் தான் இருந்தது.

ஆனால் நாட்கள் நகர, நகர பாதிப்பு எக்ஸ்பிரஸ் வேகத்தில் அதிகரித்தது. 100, 200 என்று உயர்ந்த கொரோனா, மற்ற அண்டை மாவட்டடங்களை காட்டிலும் வேகமாக உயர்ந்தது.

மிக விரைவாக 10000 கொரோனா தொற்றாளர்கள் என்ற எண்ணிக்கையை கடந்தது. கொரோனா தீவிரம் அடைந்ததால் சுகாதார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டது. பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன. நோயாளிகள் உடனடியாக கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.

இதையடுத்து, இன்று 95 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 11487 என்று உயர்ந்துள்ளது. அம்மாவட்டத்தில் 95 என்ற எண்ணிக்கை, 2வது நாளாக காணப்படும் குறைவான கொரோனா நோயாளிகளின் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0