சேரும், சகதியுமாக கிடக்கும் சாலை.. நாற்று நட்டு போராட்டம் நடத்திய பாஜகவினர்…!!

Author: Babu Lakshmanan
29 August 2022, 5:57 pm
Quick Share

மதுரை : மதுரை அருகே பல மாதங்களாக சேரும், சகதியுமாக கிடக்கும் தெருவில் பாஜக நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியில் உள்ள குலமங்கலம் மெயின் ரோட்டில் உள்ளது அழகு மலையான் நகர். இங்குள்ள தெருக்களில் கடந்த பல மாதங்களாக ரோடுகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகவும் சேரும் சகதியுமாகவும் கிடக்கிறது.

இது குறித்து உயர் அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை எந்த பலனும் இல்லை. எனவே தமிழக அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜக சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

இதில் பாஜகவினர் மற்றும் அந்த பகுதி குடியிருப்போர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Views: - 194

0

0