மதுரை ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்து : தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி… தீபாவளியன்று நிகழ்ந்த சோகம்..!

14 November 2020, 7:52 am
Fire_UpdateNews360
Quick Share

மதுரை : மதுரையில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் தெற்குமாசி வீதியில் பாபுலால் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த வந்த தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு பயங்கர தீக்காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீயை அணிக்கும் பணியின் போது தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்திருப்பது இந்தப் பண்டிகை நாளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 17

0

0

1 thought on “மதுரை ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்து : தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி… தீபாவளியன்று நிகழ்ந்த சோகம்..!

Comments are closed.