மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.. “திடீர் டுவிஸ்ட்” அந்தரத்தில் அலறல்..!!
6 August 2020, 3:36 pmமதுரை: மதுரையில் தற்கொலைக்கு முயன்று இரும்பு கம்பியில் மாட்டி உயிருக்கு போராடிய இளைஞரை மீட்ட தீயணைப்புதுறையினர் – குவியும் பாராட்டு..!!!
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற 40வயது மதிக்கதக்க இளைஞர் குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அதிகாலையில் மதுரை ஆரப்பாளையம் பைபாஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.
பாலத்தின் கீழ் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் அங்கிருந்த கம்பிகளின் மீது விழுந்துள்ளார், இதனையடுத்து கம்புகள் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியதில் வலியால் துடித்து கதறி அழுததை பார்த்த சிலர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தநிலையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கம்பியை அறுத்து எடுத்து இளைஞரை பத்திரமாக உயிருடன் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து செல்லூர் காவல்துறையினர் இளைஞர் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர், உயிருக்கு போராடிய இளைஞரை துரிதமாக செயல்பட்டு மீட்டெடுத்த தீயணைப்பு துறையினரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.