பட்டப்பகலில் இளைஞர் அரிவாளால் வெட்டி கொடுரக் கொலை.. மதுரையை உலுக்கிய கொலை சம்பவம் ; போலீசார் விசாரணை!

Author: Babu Lakshmanan
15 May 2023, 10:35 am

மதுரை தெற்கு வாசல் அருகே நடுரோட்டில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலை அழகுபுரம் 1வது தெருவை சேர்ந்த விஜய ராஜன் மகன் ஆனந்த குமார்(22). இவர் மீனாட்சி தியேட்டர் அருகே உள்ள அவரது பாட்டியை பார்க்க சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட கும்பல் ஆனந்தகுமாரை அரிவாளால் தலை மற்றும் கையை வெட்டி கொலை செய்து விட்டு பாண்டிய வேளாளர் தெருவை நோக்கி ஓடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்தவ அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பட்டபகலில் நடந்த இக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு உயர் காவல் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதுகுறித்து தெற்கு வாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?