மலைக்க வைத்த மதுராந்தகம் ஏரி : மகிழ்ச்சியில் விவசாயிகள்!!
25 November 2020, 1:42 pmசெங்கல்பட்டு : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு காரணமாக புயல் மற்றும் அதீத மழை பெய்து வருவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுகுன்றம் , திருப்போரூர் , மாமல்லபுரம், மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம் போன்ற பகுதிகளில் கனமழையும் கூடுவாஞ்சேரி ,வண்டலூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் மிதமான மழையும் நேற்று காலை முதல் விட்டு விட்டு பெய்து வருகிறது.
நேற்று காலை முதல் 6.00 மணி இன்று காலை 8.00 மணி வரை 575.80 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. பலத்த மழையின் காரணமாக இப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. செங்கல்பட்டு மாவட்டத்திலேயே மிகப் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் தற்போது 17.4 கனஅடி தண்ணீர் வந்துள்ளது.
இந்த ஏரிக்கு நீர்வரத்து பகுதிகளான நெல்வாய் மதகு ,கிளையாறு போன்ற நீர்வரத்து பகுதியில் இருந்து விநாடிக்கு 300 கனஅடி தண்ணீர் நீர்வரத்து வந்து கொண்டு இருக்கிறது. ஆகவே ஏரியின் நீர்வரத்து மேலும் அதிகரித்து மதுராந்தகம் ஏரியின் நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று ஒரு நாள் பெய்த கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0
0