மாயமான மீனவர் சடலமாக மீட்பு : ஒரு நாளுக்கு பின் சடலம் கரை ஒதுங்கியது!!

31 October 2020, 2:07 pm
Fisherman Dead - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற படகு முகத்துவாரம் பகுதியில் கவிழ்ந்து விபத்து மாயமான மீனவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 10 மணி அளவில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தங்கல் வள்ளம் முகத் துவாரம் பகுதியில் கடல் அலையில் சிக்கி கவிழ்ந்தது.

இந்த படகில் மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்களில் 4 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். இதில் வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த ஏசுதாசன்(53) கடலில் மாயமானார். அவரை சக மீனவர்கள் தேடி வந்த நிலையில் இன்று காலை தேங்காய்ப்பட்டணம் துறைமுகம் கடற் பகுதியில் ஒருவர் பிணமாக கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மீனவர்கள் அங்கு சென்று அந்த உடலை மீட்டு வந்து பார்க்கும்போது அது காணாமல் போன இயேசு தாசன் என்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதுக்கடை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேங்காய்ப்பட்டணம் துறைமுகம் நுழைவு பகுதியில் இதுபோன்ற விபத்துகள் தொடர்கதையாக நடந்து வருகிறது. எனவே துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீனவ மக்களிடையே நீண்டகாலமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 11

0

0