“மகேந்திரன் நிலைமைதான் எங்களுக்கும்“ : திண்டுக்கல்லில் மநீம நிர்வாகிகள் ராஜினாமா!!

7 May 2021, 6:39 pm
MNM - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : மக்கள் நீதி மய்யத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் 4 பேர் ராஜினாமா, தொடர்ந்து மேலும் பலர் ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியேறிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்து வருகின்றனர், அந்த வகையில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் ஆயை ஜாபர்(மேற்கு), ஓம்குமார்(கிழக்கு)
சிவசக்திவேல்(தென் மேற்கு) கருப்பசாமி(வடமத்தியம்) ஆகியோர் தங்களை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளனர்.

இதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை தொடர்ந்து மாவட்ட துணை செயலாளர் வினோத், கொடைக்கானல் நகர செயலாளர் முருகேசன்
பழனி நகர செயலாளர் அஜித்குமார் ஆகியோரும் ராஜினாமா செய்தனர், மேலும் பலர் ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது பேசிய மேற்கு மாவட்ட செயலாளர் ஆயைஜாபர், மகேந்திரன் ராஜினாமாவை ஆதரித்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறோம்.

கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை, மகேந்திரன் ராஜினாமாவிற்கு கமல் அளித்த பதில் ஏற்று கொள்ள முடியாத நிலை உள்ளது. கட்சியில் முன்பு இருந்தே பிரச்சனைகள் இருந்தது மாறும் என நினைத்தோம் ஆனால் மாறவில்லை.

கட்சியில் ஆளுமையான நபர்களுக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தரவில்லை, கட்சி பிளவுக்கும், தோல்விக்கும் சங்கையா சொலூசன் தான் காரணம், தலைவருக்கும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் இடைவெளி அதிகம் உள்ளது, தொடர்பு கொள்ள முடியவில்லை , எங்களுக்கே அப்படி இருக்க தொண்டர்கள் நிலை எப்படி இருக்கும்.

துரோகம் என்ற சொல் மிகவும் கடுமையானது, அதை கமல் பயன்படுத்தி உள்ளார், பொருளாதாரத்தை இழந்து கட்சிக்காக படுபட்ட மகேந்திரனை இப்படி பேசியதை ஏற்று கொள்ள முடியாது, இது போன்ற நிலை தான் எங்களுக்கும் வரும் என்று தெரிவித்தனர்.

Views: - 229

0

0