‘முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி -2’ விஜய்க்கு இவரா வில்லன்? எதிர்பார்க்காத ஒரு பிரம்மாண்ட கூட்டணி..!

Author: Vignesh
27 September 2022, 9:00 pm

விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கிறார் அவர். இந்தப்படம் லோகேஷ் பாணியில் மாஸ் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை முடித்தபிறகு முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் – முருகதாஸ் கூட்டணி பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் நிலையில் துப்பாக்கி 2 எப்போது வரும் என ரசிகர்கள் வருடக்கணக்கில் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி 2 படத்தில் வில்லனாக தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபுவை நடிக்க வைக்க இருவரும் ஒப்புக்கொண்டிருப்பதாக முருகதாஸ் தெரிவித்து இருக்கிறார்.

தமிழில் விஜய் ஹீரோ மகேஷ் பாபு வில்லன் ஆக நடிக்கின்றனர். ஆனால் தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோ விஜய் வில்லன் ரோலில் நடிப்பதாக தெரிகிறது. இருப்பினும் இந்த படம் தொடங்க இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என்றே தெரிகிறது.

  • The superstar has withdrawn from the film படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு நடிக்க முடியாது.. படத்தில் இருந்து விலகிய சூப்பர் ஸ்டார்!