திமுகவில் இணைந்த மைத்ரேயன்.. அதிமுகவில் பலர் மனக்குழப்பத்தில் உள்ளதாக ஷாக் தகவல்!
Author: Udayachandran RadhaKrishnan13 August 2025, 10:50 am
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பல்வேறு தேர்தல் வியூகங்கள் வகுத்து வருகின்றனர்.
கூட்டணி, கட்சி தாவல், தொகுதிப் பங்கீடு என அடுத்தடுத்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் திமுகவில் அண்மையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி அன்வர் ராஜா இணைந்ததை தொடந்து மேலும் ஒரு முன்னாள் எம்பி இணைகிறார்.
முன்னாள் எம்பி மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
1991ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர் பின்னர், 199ல் ஜெயலலிதா தலைமையின் கீழ் அதிமுகவில் செயல்பட்டார். தொடர்ந்து 3 முறை எம்பியாக இருந்த அவர், ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்தார்.

2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பின், ஓபிஎஸ் அணியில் இருந்தார். பின்னர் கடந்த வரும் பாஜகவில் மீண்டும் இணைந்த அவர் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். பின்னர் மீண்டும் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இருந்த அவர், இன்று திமுகவில் இணைந்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் போக்கு சரியில்லை, அதிமுக – பாஜக கூட்டணியில் பலர் மனக்குழப்பத்தில் உள்ளனர்.
டெல்லி என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்படுவது தான் அதிமுகவின் வேலையாக உள்ளது, என்னை அதிமுக சரியாக பயன்படுத்தவில்லை. கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை, டெல்லிக்கு தான் உள்ளது
