தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார்: அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கமல்ஹாசன் கருத்து!

7 July 2021, 9:38 pm
Quick Share

சென்னை: தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன் உட்பட 43 பேர் புதிதாக மத்திய அமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ளனர். உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலைக் கருதி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

இந்நிலையில், சமூக வலைதளமான ட்விட்டரில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:-தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்க வேண்டும்.ஆனால், உட்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பா.ஜ.க.,விற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 59

0

0