சுரண்டும் கழகங்கள்..! பிறக்கும் குழந்தைகள் தலையில் ரூ.57,000 கடன்…! கருத்து ‘கலைஞானி’..!

14 February 2020, 8:46 pm
Quick Share

சென்னை: இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் தலையிலும் 57,000 ரூபாய் கடன் சுமை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது என்று பட்ஜெட் பற்றி கடுமையாக விமர்சித்து இருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் நடிகர் கமல்ஹாசன்.

தமிழக பட்ஜெட் குறித்து அவர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

தமிழகத்தின் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் என ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் ரூ.57,000 ரூபாய் கடன் சுமை, இன்றைய தேதி வரை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

இதன் முக்கிய காரணங்கள், மாறி மாறி சுரண்டி வரும் இரு கழகங்களே.  இவர்களை அகற்றுவோம். தமிழக வருமானத்தைக் கூட்டுவோம்.

கடனில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம். மக்கள் கைகோர்த்தால் நீதி கிடைக்கும். மக்கள் நீதி மய்யம் என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply