கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மலையாளப் பட இயக்குநர் மரணம் : திரையுலகினர் அதிர்ச்சி!!

24 December 2020, 6:34 pm
Malayala Director -Updatenews360
Quick Share

மலையாள சினிமாவில் எடிட்டராக கால் பதித்தவர் ஷாநவாஸ். ஏராளமான மலையாள சினிமாவில் எடிட்டராக பணிபுரிந்த இவர், கடந்த சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக கரி என்ற படத்தை இயக்கினார்.

இந்தப் படம் தோல்வியடைந்தாலும் சினிமா விமர்சகர்களின் ஆதரவு கிடைத்தது. இந்நிலையில் பிரபல நடிகர் ஜெயசூர்யாவை நாயகனாக வைத்து சூஃபியும் சுஜாதாயும் என்ற பெயரில் ஒரு படத்தை இவர் இயக்கினார்.

Sufiyum Sujathayum review

இந்த சமயத்தில் தான் கொரோனா பரவல் காரணமாக லாக் டவுன் அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்த படத்தை ஓடிடியில் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு மலையாள சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அந்த எதிர்ப்பையும் மீறி இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குனர் ஷாநவாஸ் தனது அடுத்த படத்திற்காகக் கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

இதற்காக பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி என்ற இடத்தில் இவர் தங்கியிருந்தார். கடந்த சனிக்கிழமை இரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Malayalam Film Director Shanawaz -Updatenews360

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இன்று காலை 9 மணியளவில் இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவரை கொச்சியில் உள்ள மருத்துவமனையில் மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் உயிர் பிரிந்து விட்டது. ஓடிடியில் வெளியான முதல் மலையாள சினிமாவான ‘சூஃபியும் சுஜாதாயும்‘ படக்குழுவினர் இரங்கல் தெரிவித்த நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 48

0

0