ரூ.50 லட்சம் தரலைனா உங்க நிறுவனம் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோம்… பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது!!

Author: Babu Lakshmanan
23 May 2022, 11:18 am
Arrest - Updatenews360
Quick Share

வார இதழ் மற்றும்‌ சமூகவலைதளங்களில்‌ அவதூறு பரப்பாமல் இருக்க தனியார்‌
நிறுவனத்திடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஜி ஸ்கொயர்‌ ரியால்டர்ஸ்‌ பிரைவேட்‌ லிமிடட் நிறுவனத்தின் முதன்மை புகார் அதிகாரி புருஷோத்தமன்குமார்‌ என்பவர்‌ கடந்த 21ம் தேதி மைலாப்பூர்‌ காவல்‌ நிலையத்தில்‌ புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், கம்பெனி நிறுவனர்‌/இயக்குநர்‌ திரு.ராமஜெயம்‌ (எ) பாலா என்பவர்‌ என்றும்‌, கம்பெனியிலிருந்து பணம்‌ பறிக்கும்‌ நோக்கத்துடனும்‌, கம்பெனியின்‌ இயக்குநரின்‌ பெயருக்கு களங்கம்‌ விளைவிக்கும்‌ விதமாகவும்‌, கம்பெனி வளர்ச்சியை கெடுக்கும்‌ நோக்கத்துடனும்‌, ஜுனியர்‌ விகடன்‌ பத்திரிகையின்‌ நெருக்கமானவர்‌ என்று கூறிக்கொண்டு கெவின்‌ என்பவர்‌, கம்பெனி குழுமத்தின்‌ நிறுவனர்‌/இயக்குநர்‌ பற்றியும்,‌ கம்பெனி பற்றியும்‌ பெய்யான மிகைப்படுத்தப்பட்ட கட்டுரையை வெளியிட இருப்பதாக மிரட்டியுள்ளார்.

இதனை வெளியிடாமல்‌ இருக்க பணம்‌ கேட்டு மிரட்டியதாகவும்‌, பணம்‌ கொடுக்க மறுத்ததால்‌ யூடியூப் மற்றும் டுவிட்டரில் தொடர்ச்சியாக கம்பெனி மற்றும் அதன் இயக்குநர் பற்றி வேண்டுமென்றே பொய்யான, ஆதாரமற்ற கட்டுரைகளையும்‌ செய்திகளையும்‌ வெளியிட்டதாக கூறியுள்ளார்‌.

இந்த சூழ்நிலையில்‌ கடந்த ஜனவரி மாதத்தில்‌ கம்பெனி நிறுவனருக்கு, அந்த நபர் தொலைபேசியில்‌ தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம்‌ தரவேண்டும்‌ என்றும்,‌ இல்லை
என்றால்‌ ஜூனியர்‌ விகடன்‌ அடுத்த இதழில்‌ கம்பெனி பற்றியும்,‌ இயக்குநர்‌ பற்றியும்‌ தரக்குறைவாகவும்‌ கம்பெனியின்‌ பெயருக்குக்‌ களங்கம்‌ விளைவிக்கும்‌ விதமாகவும்‌ செய்தி வெளியிடப்படும்‌ என்று மிரட்டியுள்ளார்.

மேலும்‌ மாரிதாஸ்‌ மற்றும்‌ சவுக்கு சங்கர்‌ ஆகியவர்கள்‌ மூலம்‌ யூடியூப் மற்றும் டுவிட்டரில் மூலம்‌ தரக்குறைவாக ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதாக மிரட்டியதாகவும்,‌ மேற்படி நபர்‌ மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்‌. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு கெவின்‌ கைது செய்யப்பட்டு, அவர்‌ வீட்டில்‌ பதுக்கி வைத்திருந்த ஏர் பிஎஸ்டல், தகவல்‌ தொடர்பு மற்றும்‌ மின்னனு சாதனங்கள்‌ கைப்பற்றப்பட்டு, கெவின்‌ நீதிமன்ற காவலுக்கு
உட்படுத்தப்பட்டார்‌. இவ்வழக்கு தொடர்ந்து புலன்‌ விசாரணையில்‌ உள்ளது.

மேலும்‌ இது போன்ற புகார்கள்‌ வரும்பட்சத்தில்‌ சம்பந்தப்பட்ட நபர்கள்‌ மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்‌, எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Views: - 526

0

0