தம்பி மனைவியின் உதட்டை கடித்து குதறிய அண்ணன்.. ரத்தம் சொட்ட சொட்ட நிகழ்ந்த பரிதாபம்!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2024, 11:54 am

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வடக்கு சாலை கிராமத்தில் வசித்து வரும் லட்சுமணன் மற்றும் மனைவி தங்கம்,

லட்சுமணன் உடன் பிறந்த சகோதரர் ராமர் இருவரும் அருகருகே வசித்து வருகின்றனர். வெகு நாட்களாக இந்த இருவருக்கும் வீட்டின் அருகே செல்லும் பாதை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

அடிக்கடி சிறு சிறு சண்டை வந்து காவல் நிலையத்திற்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு இந்த பாதையை ராமர் அடைத்து விட்டாதாக கூறப்படுகிறது.

இதனால் இரண்டு குடும்பத்திற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றி தகராறாக மாறி உள்ளது. இதில் ராமர் தனது தம்பி மனைவியான தங்கத்தின் உதட்டையும் வாயையும் சேர்த்து கோபத்தில் கடித்து கொதறி விட்டார்.

அதிகமாக இரத்தம் வெளியேறியது அங்கிருந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில்,இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தங்கம் சாலைகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் மூன்று நாட்கள் ஆகி விட்டது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை குற்றம் சாட்டி வருகின்றனர், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து கூறுகையில் புகார் கொடுத்து மூன்று நாட்களாக ஆகிவிட்டது எனது மகள் காவல் நிலையத்திற்கு மூன்று நாட்களாக செல்கிறார் இன்றைக்கு வா நாளைக்கு வா என்று கூறி தொடர்ந்து அலைய விடுகிறார்கள்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!