மது குடிக்க பணம் இல்லாததால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

19 September 2020, 10:16 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் மது குடிக்க பணம் இல்லாததால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்தவர் சுப்பராயலு மகன் ராஜாராம் (40). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு சண்டை போட்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை வீட்டில் துருநாற்றம் அடித்துள்ளது. இதனையடுத்து, ராஜாராமின் தாய் பொது மக்களின் உதவியோடு அறையின் கதவை திறந்து பார்க்கும் போது இரத்தம் வடிந்த நிலையில் ராஜாராம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் போலீசார் ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுபானம் குடிக்க பணம் இல்லாத விரக்தியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 8

0

0