அடப்பாவத்த…. பசிக்காக போண்டா, டீ சாப்பிட்ட நகராட்சி தற்காலிக ஊழியர் பலி…!!

Author: Babu Lakshmanan
12 August 2022, 6:30 pm

உளுந்தூர்பேட்டையில் பசிக்காக போண்டா, டீ சாப்பிட்ட நகராட்சி தற்காலிக ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி உளுந்தாண்டார் கோயில் துப்புரவு குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பிரபு (36). இவர் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பணியின் போது, மாலை நேரத்தில் பசிக்காக விருதாச்சலம் ரோட்டில் உள்ள ஒரு கடையில், இரண்டு போண்டா, ஒரு டீ சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால், அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தனர்.

பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பிரபு, இன்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளன.

பசிக்காக போண்டா மற்றும் டீ சாப்பிட்டவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள உறவினருடைய அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?