CALLING BELL அடித்து நூதன செயின் பறிப்பு… பெண்களை அலற விடும் ஷாக் VIDEO!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2024, 2:01 pm

சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் மட்டுமே தங்கள் கைவரிசையை காட்டி சங்கிலிகளை பறித்து செல்கிறார்கள் என்று கருதினால் அது தவறு என்பதை ஹைதராபாத்தை சேர்ந்த திருடன் ஒருவன் உறுதிப்படுத்தி இருக்கிறான்.

ஹைடெக் சிட்டி என்ற பெயர் பெற்ற ஹைதராபாத் நகரில் உள்ள நரசிங்கி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சன் சிட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு பட்ட பகலில் வந்த கொலைகள் ஒருவன் கதவு உட்புறமாக தாளிடப்பட்டிருந்த வீடு ஒன்றின் காலிங் பெல்லை மூன்று முறை அழுத்தினான்.

முகத்தை கர்சி பால் கட்டி மறைத்திருந்த அந்த கொள்ளையன் சற்று நேரம் காத்திருந்த நிலையில் அந்த வீட்டின் பெண் கதவை திறந்தார்.

இதையும் படியுங்க: பார்சலில் வந்த அழுகிய ஆண் சடலம்… விசாரணையில் திக்.. திக்..!!

அப்போது கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்ற திருடன் அந்த பெண் கழுத்தில் அணிதிருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

அந்தப் பெண் போட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் ஓடி வந்து திருடனை பிடிக்க முயன்றனர். ஆனால் திருடன் அதற்குள் கீழே இறங்கி தயாராக வைத்திருந்த மோட்டார் பைக்கில் ஏறி தப்பி சென்று விட்டான்.

இந்த கொள்ளை சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ள நர்சிங்கி போலீசார் சங்கிலிப் பறித்து கொண்டு தப்பி ஓடிய திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • bayilvan ranganathan review retro movie முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!