ஜவுளிக்கடையில் புகுந்த கும்பல்… பெண்ணுக்கு பின்பு நின்றிருந்த நபர் செய்த காரியம் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
1 May 2024, 1:56 pm
Quick Share

மூன்று பெண்கள், ஒரு ஆண், ஒரு குழந்தை என குடும்பத்தோடு வந்து ஜவுளிக்கடையில் புடவைகளை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பிரபலமான ஜவுளி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஜவுளி கடைக்கு மூன்று பெண்கள், ஒரு ஆண், ஒரு கைக்குழந்தை என குடும்பமாக ஒரு கும்பல் ஜவுளி எடுக்க வந்தது. அப்போது, கடையில் உள்ள பணியாளர்கள் அவர்கள் கேட்கும் துணி ரகங்களை எடுத்து காட்டிக் கொண்டிருந்தனர். வந்தவர்களும் அக்கறையாக துணிகளை ஆர்வமுடன் பார்த்தனர்.

மேலும் படிக்க: பாஜகவுக்கு 400 எல்லாம் இல்ல… பிரதமராக பதவி ஏற்க தயார் ; கொளுத்தி போட்ட சுப்பிரமணியசுவாமி!!

அப்போது அவர்களுடன் வந்த கைலி கட்டிக்கொண்டு, கட்டம் போட்ட சட்டை போட்டிருந்த ஆண் சேரில் உட்கார்ந்து கொண்டு கடையின் உள்ள ரேக்கின் கீழே இருந்து புடவை ஒன்றை எடுத்து தான் வைத்திருந்த கட்டை பைக்குள் வைக்கிறார். மேலும், நின்று கொண்டு துணிகளை வாங்குவது போல் பார்க்கும்போது மிக லாவகமாக அப்போதும் ஒரு புடவையை எடுத்து பைக்குள் வைக்கிறார். இவைகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. வந்தவர்கள் பெயரளவிற்கு சில பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பிச் சென்றுள்ளனர்.

அப்போது கடையின் உரிமையாளர் துணிகளின் எண்ணிக்கை குறைவதைக் கண்டு கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இந்த காட்சிகளை கண்டுபிடிக்கிறார். இதனை பலருக்கும் பகிர்ந்து இந்த கும்பல் பல இடங்களிலும் இதுபோன்று திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகிறது எனவும், இதனை பார்க்கும் மற்ற கடைக்காரர்கள் எச்சரிக்கையாகவும், ஏமாறாமல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது திருட்டு சம்பவம் என்பது சேத்தியாத்தோப்பு நகரை குத்தகைக்கு எடுத்து நடப்பது போல அதிகம் நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் அடுத்து என்ன நடக்குமோ? எங்கு திருடு போகுமோ என வேதனையோடு தவித்து வருகின்றனர்.

Views: - 597

0

0