மாண்டஸ் புயல் எதிரொலி ; தூத்துக்குடி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
8 December 2022, 9:59 am

மாண்டஸ் புயல் உருவானதை தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாமபன் துறைமுகத்திலும் 2ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டது.

boats - updatenews360

தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் புயல் புதுசேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னைக்கு மேற்கு வடமேற்கு திசையில் 770 கிலோ மீட்டர் தொலைவில் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் தாறு மண்டலம் நகர்ந்து வருகிறது. புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும், டிசம்பர் 9ஆம் தேதி மாலை முதல் டிசம்பர் 10ஆம் தேதி காலை வரை 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

boats - updatenews360

இதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் மீனவர்கள் இரண்டாம் நாளாக கடலுக்குச் செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இரண்டாம் நாளாக சுமார் 245 விசைப்படகுகளும், திரேஸ்புரத்தில் சுமார் 400 நாட்டு படகுகளும் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

boats - updatenews360
  • retro movie second day collection is low எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?