அதிமுக கூட்டணி கட்சிக்கு மன்சூர் அலிகான் திடீர் ஆதரவு… தமிழர்களுக்கு மட்டுமே வேலை என அறிவிக்க முடியுமா..?

Author: Babu Lakshmanan
15 April 2024, 10:29 am
Quick Share

அதிமுக கூட்டணி கட்சியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் அந்தந்த கட்சியினர், தற்பொழுது சூறாவளி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகே வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் பொதுமக்களிடையே பல்வேறு பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார்.

மேலும் படிக்க: CM ஸ்டாலினுக்கு தோல்வி பயம்… செங்கல்லை தூக்கி திரியும் உதயநிதி முடித்த கட்டங்களை திறக்கலாமே? இபிஎஸ் விமர்சனம்!

இதனையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த நெல்லை முபாரக் அலிக்கு இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் நான் ஆதரவு தருகிறேன். பிஜேபி தேர்தல் அறிக்கையில் ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவித்துள்ளது குறித்து ஒரே மாடு ஒரே கோமியம் என நகைச்சுவையாக பதில் அளித்தார்.

தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டாம். தமிழக அரசு மருத்துவமனையே போதும். ஏனென்றால் இங்கு உள்ள மக்களை அதிகமாக குடிக்க வைத்து, பின்னர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை இங்கே ஆக்கிரமிப்பு செய்ய வைத்துக் கொள்வார் இந்த மத்திய அரசும், மோடி அரசும்.

மேலும் படிக்க: இது கூடத் தெரியாமல் ஸ்டாலின் CMஆக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு : கேரண்டி தயார்.. விடியல் எங்கே? அண்ணாமலை!!!!

தமிழகத்திற்கு தொடர்ந்து வரும் மோடியை பார்த்து நான் கேட்கிறேன், தமிழகத்தில் ஆரம்பிக்கும் விமான நிலையம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற தொழில் நிறுவனத்திற்கு தமிழர்களுக்கு மட்டும் வேலை தர முடியுமா…? அப்படி என்றால் வட மாநிலத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் தற்போது தமிழர்கள் தான் வேலை தருகிறார்கள், முதலில் அதனை சரி செய்யும்படி கூறினார்,

Views: - 413

0

0