வரும் 14ம் தேதி தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் : விவசாயிகள் சங்கத்தின் அறிவிப்பால் அதிர்ச்சியில் தமிழக அரசு..!!

Author: Babu Lakshmanan
11 March 2023, 6:03 pm

14-ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கம் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் ம.ப.சின்னதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- திருச்சி மாநகர புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்புகளுக்காக NH67 தேசிய அரைவட்ட சாலைக்காக காவேரி கட்டளை பாசனத்தில் 13 ஏரிகளில் மண்ணைக் கொட்டி அழிக்கப்பட்டுள்ளது. ஆறு ஏரி குளம் குட்டை பாசன வடிகால் மழைநீர் வரத்து வாரிகள் பொறுப்பற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கே.சாத்தனூர் பஞ்சப்பூர் தரிசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அரியாரறு, கோரையாறு, குடமுருட்டி உய்யக்கொண்டான் கொடிங்கால் ஆறுகளில் பெருவெள்ள பாதிப்புகளுக்கு தீர்வு காணப்படாத நிலை உள்ளது.

1970-ம் ஆண்டு விவசாயிகளின் 9 அம்ச கோரிக்கை போராட்டத்தின் போது துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான விவசாய குடும்பத்திற்கு இழப்பீடு நிவாரணம் வழங்கி உதவிடக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதவத்தூர் மேற்கு குடியிருப்பு மக்களுக்கு கடந்த 40ஆண்டு காலமாக பட்டா வழங்கப்படாமல் உள்ளதை வழங்கிட வேண்டும். மேட்டூர் சுரபங்கா திட்டத்தை துரிதப்படுத்தி நாமக்கல் முசிறி துறையூர் பெரம்பலூர் பகுதி நிலத்தடி நீர் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

பழைய கரூர், திருச்சி ராணி மங்கம்மாள் சாலையானது 100அடிகள் அகலம் கொண்டதை பழைய ஆவணங்களின்படி அளவீடு செய்து போக்குவரத்து சாலையாக மாற்றி அமைக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து வருகிற மார்ச் 14ஆம் தேதி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக வாயில் முன்பாக தண்ணீர் அருந்த உண்ணா நிலை போராட்டம் ஈடுபட உள்ளோம், என தெரிவித்தார்.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…