ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்து தனிக்குடித்தனம் : வாலிபர் போக்சோவில் கைது…
Author: kavin kumar20 January 2022, 5:21 pm
சென்னை : எண்ணூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சென்னை எண்ணூர் அடுத்த சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆண்டனி . இவருக்கும் திருவொற்றியூரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், காணாமல் போன சிறுமியை ஆண்டனி திருமணம் செய்து தனியாக குடும்பம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஆண்டனியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0
0