தியாகிகளுக்கு வழங்கும் ஓய்வூதியத் தொகை உயர்வு : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2021, 10:43 am
CM Stalin - Updatenews360
Quick Share

சென்னை : விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் திறந்த ஜீப்பில் நின்றவாறு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசிய கோடியை ஏற்றினார்.

அதன்பின் சுதந்திர தின உரையாற்றிய அவர், “விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் உதவிகள் வழங்குவதில் தமிழக அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.

அந்த வகையில்,மாநில அரசால் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.17 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்.குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.8,500 லிருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Views: - 258

0

0