பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.. மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2025, 12:43 pm

புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ வாசுகி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்

பகல் காம் தாக்குதலில் மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடி இருந்ததால் தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பதை அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தில் மத்திய அரசை ஒப்புக் கொண்டுள்ளது அதற்குண்டான காரணத்தை மத்திய அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதையும் படியுங்க: மாண்புமிகு மத்திய அமைச்சர்? பிரபல நடிகைக்கு அடிச்சது யோகம்!

முருகன் மாநாட்டில் பேசிய அனைவருமே அரசியல் தான் பேசினார்கள். அந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட வீடியோவை நாங்கள் ஏற்கவில்லை கண்டனம் தெரிவிக்கிறோம் என்று அதிமுக தெரிவித்துள்ளது.

அதிமுக தங்கள் ஊழல் சாம்ராஜ்யத்தை பாதுகாக்க பாஜக ஆதரவு தேவைப்படுகிறது. அதிமுகவை பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக காலூன்ற பார்க்கிறது. இந்த கூட்டணியால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் கிடையாது.

அறிவியல் பூர்வமான ஆதாரம் இன்றி மூடநம்பிக்கை கருத்துக்களை அந்த மாநாட்டில் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை இந்த மாநாட்டை தேர்தல் தந்திரமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் பாஜகவின் முயற்சி தான் முருக பக்தர்கள் மாநாடு கீழடி விவகாரத்தில் அறிக்கையை வெளியிட்டு விட்டு அதில் தவறு இருந்தால் சொல்லலாம் ஆனால் அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை வெளியிட அரசு மறுத்து வருகிறது.

தமிழக அரசு நவீன தாராள மையக் கொள்கையை கடைப்பிடிப்பதால் சொத்துவரி ஒலித்த வரிகளில் விலை உயர்ந்துள்ளது திமுக அரசியல் இது மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது

குறிப்பாக தமிழகத்தில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது கவலை அளிக்கிறது.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்று அரசு கூறினாலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் ரீதியான குற்றங்கள் வழக்குகள் எவ்வளவு நிலுவையில் உள்ளது குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எந்த அளவிற்கு உள்ளது என்பதை குறித்த வெள்ளை அறிக்கையை சட்டமன்றத்தில் முதல்வர் வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருந்தாலும் அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அதனை நாங்கள் கண்டிக்க தவறவில்லை

டாஸ்மார்க் விவகாரத்தில அரசுக்கு எதிராக நாங்கள் போராடி தான் வருகிறோம் எங்களுடைய போராட்டத்தில் தான் பல கடைகள் மூடப்பட்டுள்ளன

அரசு டாஸ்மாக் கடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .அதிமுக பாஜக கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி அல்ல கொள்கை அற்ற கூட்டணி

பாஜக பல மாநிலங்களில் அங்கு ஆட்சி அமைப்பதற்கு பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றனர் தற்போது முருகன் மாநாட்டை கையில் எடுத்துள்ளனர்

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!