தள்ளு.. தள்ளு.. தள்ளு.. திடீரென நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து ; அரை கிலோ மீட்டருக்கு தள்ளிச் சென்ற போலீஸார்..!!

Author: Babu Lakshmanan
23 March 2023, 6:34 pm

நடுரோட்டில் ரிப்பேர் ஆகி நின்ற அரசு பேருந்து, காவலுக்கு நின்ற போலீசார் அரை கிலோ மீட்டர் தூரம் பேருந்தை தள்ளிவிட்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் அரசு பேருந்துகள் காயலான் கடைக்கு போக வேண்டிய நிலைமையில் உள்ளதாக, சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை பார்த்து பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர். அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் சாதாரண மக்கள் பாவம் என்றால், அதை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது.

பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகள் அடிக்கடி ரிப்பேர் ஆகி நின்று விடுவதும், அதில் பயணம் செய்யும் பேருந்து பயணிகளை நடுவழியில் இறக்கி விட்டு மாற்று பேருந்தில் செல்ல வைப்பதும் தொடர்கதையாகி வருகின்றன.

இந்த நிலையில், மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென்று நடுவழியில் நின்றது. பேருந்தில் இருந்த பயணிகள் அரை கிலோ மீட்டர் தூரத்தில் பேருந்து நிலையம் இருந்ததால் அனைவரும் இறங்கி சென்று விட்டனர்.

இருப்பினும், முக்கிய சாலையில் பேருந்து நின்றதால் பேருந்து பின்புறம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நல்ல வேலையாக அங்கு ஒரு போராட்டத்திற்கு பாதுகாப்பிற்கு வந்திருந்த காவல்துறையினர் ஒன்றிணைந்து, பேருந்தை அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளு தள்ளு தள்ளு என்று தள்ளிக்கொண்டே சென்றனர். இதில் சற்று தொப்பை வைத்துள்ள காவல் துறை ஒருவர் பாதி தூரம் சென்ற பின்பு தள்ள முடியாமல் பேருந்து பின்புறமாகவே நடந்து சென்றது வாட்ஸ் அப்பில் வைரல் ஆகி வருகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?