மாணவர்களின் தற்கொலை அதிகரிக்க பெற்றோரின் எதிர்பார்ப்பே காரணம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.!!

13 September 2020, 11:08 pm
Quick Share

மதுரை: தமிழகத்தில் மாணவர்களின் தற்கொலை அதிகரிக்க பெற்றோரின் எதிர்பார்ப்பே காரணம் என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக அடுத்தடுத்து மூன்று மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எதிரொலியாக மதுரையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு போட்டித் தேர்வுகளை எதிர் கொள்வதால் மட்டும் தகுதித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆர் பி உதயகுமார் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் மற்றும் மனநல மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மாணவர் மத்தியில் உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து மேடையில் பேசிய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தில் தற்கொலையை அதிகரிக்க பெற்றோர்களின் எதிர்பார்ப்பு காரணம் என்றும், மாணவர்கள் மன உளைச்சலை அடையக் கூடாது என்பதற்காகவே அரியர் வைத்தவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக இந்த அரசு அறிவித்ததாகவும் தெரிவித்தார். அதை தொடர்ந்து மதுரையில் இருந்த ஜோதி ஸ்ரீ துர்கா அவர்களுக்கு மலர்தூவி அவருடைய திருவுருவ படத்திற்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

Views: - 7

0

0