புதுச்சேரியில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுக்கு மருத்துவ இடஒதுக்கீடு: முதலமைச்சர் அறிவிப்பு

Author: kavin kumar
19 December 2021, 6:52 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் மருத்துவ கல்வியில் 3 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் எனவும் கூறினார்.

புதுச்சேரி மாநில முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் சார்பாக தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கில் இந்திய வங்கதேச போரின் வெற்றி பொன்விழா ஆண்டு மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் கலந்துகொண்டு போரில் பங்கு பெற்ற வீரர்களுக்கு விருதும் ரொக்கப் பரிசு வழங்கி கெளரவித்தனர். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, எல்லையில் கண்ணுக்கு தெரிந்த எதிரிகளுடன் போராடும் ராணுவ வீரர்கள் கண்ணுக்கு தெரியாத கொரோனாவை வெல்ல தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர்,

புதுச்சேரியில் உள்ள ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு அரசு சார்பில் இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு உயர்கல்வியில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் மருத்துவபடிப்பில் 1 சதவீதம் மட்டும் தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் ராணுவ அதிகாரிகளின் வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் மருத்துவ கல்வியில் 3 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Views: - 371

0

0