பெரிய தந்தங்களுடன் கோவையில் உலா வரும் ராட்சத காட்டு யானைகள்… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

Author: Babu Lakshmanan
30 October 2021, 9:11 am
Cbe elephant- updatenews360
Quick Share

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் குடியிருப்பு பகுதியில் பெரிய தந்தங்களுடன் உலா வரும் காட்டு யானைகளின் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் வனப்பகுதியில் இருந்து இறங்கி வரும் காட்டு யானைகள் குப்பேபாளையம், வண்டிக்காரன் புதூர், மற்றும் தென்னமநல்லூர் பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வருகிறது. இதனால் யானை வருவதை உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக அப்பகுதி விவசாயிகள் தகவலை பகிர்ந்து கொள்கின்றனர். வழக்கமாக, நள்ளிரவு நேரங்களில் யானைகள் அவ்வழியாக வந்த நிலையில் நேற்று விரைவாகவே யானைகள் அப்பகுதிகளுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் மீண்டும் இரவு 12 மணிக்கு பெரிய தந்தங்களுடன் இரண்டு காட்டு யானைகள் தென்னமநல்லூர் குடியிருப்பு அருகே கடந்து செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள் பொதுமக்கள் இரவு நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 498

0

0