பண்ணை வீட்டில் திமுகவினர் நடத்திய மெகா மது விருந்து… அண்டா முழுவதும் மதுபானம் : கோவில் பத்திரிகை என அச்சிட்டு அசைவ பார்ட்டிக்கு அழைப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2022, 1:58 pm
Dmk Liquor Treat - Updatenews360
Quick Share

திருப்பூர் : கோவிலில் பூச்சாட்டு விழா என பத்திரிக்கை அடித்து கொடுத்துவிட்டு மெகா விருந்து கொண்டாட்டம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூரை சேர்ந்த இல.பத்மநாபன் என்பவர் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவராகவும், திருப்பூர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக உள்ளார்.

இவர் மூலனூர் அருகே உள்ள தூரம்பாடி என்கிற கிராமத்தில் உள்ள அவரது உறவினருக்கு சொந்தமான வேட்டுவன்காட்டு தோட்டத்தில் சுமார் 5000 பேருக்கு பத்திரிகை கொடுத்து மெகா மது விருந்துடன், அசைவ விருந்தும் வழங்கப்படும் என திமுகவினர் களுக்கு பத்திரிக்கை அடித்து கொடுத்திருந்தார்.

அதன்படி அழைப்பிதழை பெற்றுக்கொண்ட திமுகவினர்கள் மெகா விருந்துக்கு வருகை தந்தனர். திமுக உடன் பிறப்புகள் அனைவருக்கும் விருந்து உபசரிப்பாக அண்டாவில் கலக்கி வைத்து இருந்த மதுவை லிட்டர் லிட்டராக ஊற்றிக் கொடுத்தனர்.

ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் மீண்டும் வரக் கூடாது என்றும் குரல் கொடுத்தபடியே மதுவை அண்டாவில் இருந்து எடுத்து ஊற்றிக் கொடுக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தாராபுரம் தாலுகா முளையம் பூண்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற உள்ளது என்று பத்திரிக்கைகள் அச்சிடப்பட்டு கொடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மதுபானக் கடைகளில் மது கூடத்தை நடத்த திமுகவினர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் தற்போது பார் மூலம் கிடைக்கும் பணத்தை பங்கு பிரிப்பதில் பல இடங்களில் திமுகவினர் கோஷ்டிப் பூசல் காரணமாக உள்ளூர் திமுக நிர்வாகிகள் இருவருக்கும் இடையேயான ஆடியோக்கள் வெளியாகி வைரலாகி வரக்கூடிய சூழ் நிலையில் தற்போது திடீரென தூரம்பாடி கிராமத்தில் மதுவிருந்து வழங்கப்பட்டுள்ளது என்பது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

மதுவை அழிக்க வேண்டும் , ஒழிக்க வேண்டும் என திமுகவை சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், ஆளுங்கட்சி நிர்வாகிகளே மெகா மது விருந்து நடத்தியுள்ளது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 726

0

0