கருணாநிதியின் துணைவி ராஜாத்தி என்ன சுதந்திர போராட்ட தியாகியா? உதயநிதியை உலுக்கும் மீம்ஸ்…!

2 August 2020, 1:34 pm
Quick Share

சென்னை: கருணாநிதியின் துணைவி ராஜாத்தி என்ன சுதந்திர போராட்ட தியாகியா? என்று உதயநிதியை கிண்டல் செய்யும் மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இப்போது திமுகவுக்கு உள்ள ஒரே பிரச்னை…. மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதலமைச்சர்கள் பெயர்களை சூட்டி கவுரவப்படுத்தியது தான். ஜெயலலிதாவின் பெயர் எப்படி வைக்கலாம் என்று கத்துக்குட்டி உதயநிதி ஸ்டாலின் (அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இப்படி தான் கூறுவார்) இஷ்டத்துக்கு டுவிட்டரில் பொங்கி தள்ளினார்.

கருணாநிதியின் சிந்தனையில் உதித்த மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஜெயலலிதா பெயரா என்று கேள்வி கேட்டுள்ளார். இது ஒரு பிரச்னையா? இப்படி ஒரு மட்டமான விமர்சனம் தேவையா? இப்போது அவசியமா? என்று சாட்டையடி கேள்விகள் உதயநிதிக்கு எதிராக வந்து விழுந்து கொண்டிருக்கின்றன.

இணையத்தில் மீம்ஸ்கள் பறக்கின்றன. அதில் பல மீம்ஸ்கள் உதயநிதி ஸ்டாலினையும், திமுகவையும் பாடாய் படுத்தி வருகிறது. அதில் ராஜாத்தி என்ன இந்திய சுதந்திர போராட்ட தியாகியா? அவரது பெயரில் எதுக்கு தெரு பெயர். அவர் எந்த அரச பதவியை வகித்தார். அவருக்கு ஏன் இந்த அங்கீகாரம்?

5 முறை முதலமைச்சராக இருந்தவர் பெயர் வைப்பது அருவருப்பு என்றால் அஞ்சுகம் அம்மாள் என்ன அமெரிக்க ஜனாதிபதியா? இல்லை ராசாத்தி என் இராஜ குடும்பமா? திமுகவின் முதல் அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர் சத்தியவாணி முத்துவின் பெயரை எத்தனை திட்டத்துக்கு கருணாநிதி சூட்டி இருக்கிறார்? சொல்லுங்கள் உதய்?

வித் அவுட்டில் ரயில் ஏறி வந்தவருக்கு மெரினாவில் சமாதியா? அசிங்கத்தின் மொத்தம் கருணாநிதி. அசிங்கத்தின் மிச்சம் ஸ்டாலின், அசிங்கத்தின் சொச்சம் உதயநிதி. 2015ம் ஆண்டுகளில் மெட்ரோ ரயில் வழித்தடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது அம்மாதான். இந்த வரலாறு எல்லாம் அப்போது நண்பேன்டா படத்தில் சந்தானத்துக்கு சைடு ரோலாக நடித்து கொண்டிருந்த உதயநிதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று மீம்ஸ்களை உலவ விட்டுள்ளனர் இணையவாசிகள்…!

Views: - 2

0

0