தொடர் மழை எதிரொலி: மதுரை புது மண்டபத்திற்குள் புகுந்த மழை நீரால் வியாபாரிகள் அவதி

Author: Udhayakumar Raman
4 December 2021, 8:10 pm
Quick Share

மதுரை: மதுரையில் பெய்த கனமழையால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எதிரே உள்ள புது மண்டபத்திற்குள் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தொடர்ந்து கனமழை காரணமாக மதுரை கீழ ஆவணி மூல வீதி முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கி இருப்பதால் அங்குள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை கீழ ஆவணி மூல வீதி தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்லாதவன் எச்சரிக்கை செய்தும் மாற்றுப்பாதை அமைத்துத் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் புதுமண்டபத்திற்குள் தண்ணீர் நிரம்பி இருப்பதால் மாற்றுப் பாதையை பயன்படுத்துவதால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டி மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Views: - 218

0

0