கோவை, நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம் தகவல்

Author: kavin kumar
14 August 2021, 10:38 pm
Rain - Updatenews360
Quick Share

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாள்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்கள், நீலகிரி, கோவை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி – காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Views: - 256

0

0