தீபாவளியையொட்டி சென்னை மெட்ரோ ரயில்சேவைகள் நீட்டிப்பு : நாளை முதல் 2 நாட்கள் நள்ளிரவு 12 மணி வரை இயக்கம்..!!

Author: Babu Lakshmanan
1 November 2021, 2:10 pm
vannarapettai metro - updatenews360
Quick Share

சென்னை : சென்னை மெட்ரோ ரயில்‌ சேவைகள்‌ நாளை மற்றும்‌ நாளை மறுநாள்‌ நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிரப்பதாவது :- தீபாவளியை முன்னிட்டு, வெளியூர்‌ செல்லும்‌ பயணிகளின்‌ வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்‌ சேவைகள்‌ நாளை (02.11.2021) மற்றும்‌ நாளை மறுநாள்‌ (03.11.2021) நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன. நெரிசல்மிகு நேரங்களில்‌ மாலை 05.00 மணி முதல்‌ இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில்‌ இயக்கப்பட்டு வரும்‌ மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ நாளை முதல் 2 நாட்களுக்கு மட்டும்‌ இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும்‌, நாளை மற்றும்‌ நாளை மறுநாள்‌ இரவு 11:00 மணி முதல்‌ நள்ளிரவு 12:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில்‌ மெட்ரோ ரயில்‌ சேவைகள்‌ இயக்கப்படும்‌. மேற்கண்ட மெட்ரோ இரயில்‌ நீட்டிப்பு சேவைகள்‌ மேற்குறிப்பிட்ட 2 நாட்களுக்கு மட்டுமே, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 356

0

0