ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!!

16 May 2021, 6:21 pm
Durai Murugane- Updatenews360
Quick Share

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை எப்போது எதிக்கப்படும் என்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

மேட்டூர் அணையை ஜூன் 12-ல் திறப்பது பற்றி தஞ்சையில் ஆலோசனை அமைச்சர் துரைமுருகன் மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கே.என் நேரு அன்பில் மகேஷ் ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் தேதி குறித்து முதல்வர் அறிவிப்பார். விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்.

போதிய கால அவகாசம் இல்லாததால் தூர்வாரும் பணியை உடனே தொடங்கவிருக்கிறோம். குறுவை சாகுபடி பரப்பு, டெல்டா ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாருதல் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Views: - 119

0

0