நள்ளிரவில் மதுபோதையில் கார் ரேஸ் : நொறுங்கிப்போன ஆட்டோ.!

19 August 2020, 10:39 am
Car Race - Updatenews360
Quick Share

கோவை : நள்ளிரவில் மதுபோதையில் கார் ஒன்று வேகமாக வந்து ஆட்டோ மீது மோதி சுக்குநூறாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாயிபாபா காலனி பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்டன். இவர் லோகநாதன் என்பவரிடம் , ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் வீட்டின் அருகே ஆட்டோவை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு , தூங்க சென்றுள்ளார்.

இந்த சூழலில், இன்று காலையில் ஆட்டோ அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் மோதி உருக்குலைந்து போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக சாயிபாபா காலனி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா மூலம்பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது நள்ளிரவில் கார் ஒன்று வேகமாக வந்து ஓரத்தில் நின்ற ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளாக்கிவிட்டு நிற்காமல் சென்றது பதிவாகியுள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு விபத்துக்குள்ளாக்கி நிற்காமல் சென்ற காரின் உரிமையாளரை கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் அருகில் உள்ள கல்லூரி நுழைவாயில் மீதும் கார் மோதிய தடயங்கள் உள்ளன.

மது போதையில் சிலர் அடிக்கடி இது போல் கார் ரேசில் ஈடுபட்டு விபத்து ஏற்படுத்தி வருவதாகவும், இது குறித்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Views: - 30

0

0