அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் : சொத்து குவித்த வழக்கில் ஆஜராக சம்மன்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2021, 1:07 pm
Anitha Radha Krishnan - Updatenews360
Quick Share

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

திமுக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக உள்ள அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 7 பேருக்கு இந்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை 7 நாட்கள் தனித்தனியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை கூறியுள்ளது. கடந்த 2001-2006 காலக்கட்டத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமகா சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாக 4 கோடியே 90 லட்சம் அளவிற்கு சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

Views: - 265

0

0