கோவில் திருவிழாவுக்கு கூட்டம் கூடுவது, நாகரிக சமுதாயத்துக்கு நல்லதல்ல.. அமைச்சர் சர்ச்சை பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2025, 4:59 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 9 கோடி மதிப்பிலான களியக்காவிளை பேருந்து நிலையம் மற்றும் 14.55 கோடி மதிப்பில் மார்த்தாண்டம் காய்கறி சந்தை பணிகளை தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

உடன் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, எம்.எல்.ஏ தாரகை கத்பட் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். அப்போது துறை சார்ந்த அதிகாரிகளை துரிதமாக பணிகளை செய்து முடிக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோதங்கராஜ் கூறியதாவது, தமிழகத்தில் அமித்ஷா உட்பட மத்திய அமைச்சர்கள் வருவது சம்மந்தமாக கேட்ட போது முதலில் சிறப்பாக ஆட்சி செய்ய சொல்லுங்கள் .

ஜி7 மாநாட்டில் இந்தியாவுக்கு அழைப்பில்லை என்ற செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதை இந்திய குடிமகனாக நான் வருத்தபடுகிறேன் . ஏன் என்றால் நம் நாட்டினுடைய பிரதமர்கள் தொடர்ந்து அந்த கூட்டங்களுக்கு சென்று இந்தியாவின் பெருமை உலக அளவில் வளர்ந்து கொண்டு இருந்தது .

ஜி7 மாநாட்டிற்கு இந்தியா அழைக்கப்படவில்லை என்று சொன்னால் சமய பொறுமையின்மை இந்த அரசின் பல்வேறு கொள்கை திட்டங்களில் ஏற்பட்டிருக்கும் இடை வெளி உலகளாவிலாகிய பார்வை நமக்கு எதிராக இருக்கிறதோ என்ற எண்ணத்தை சாதாரண குடிமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. முதலில் அதை சரி செய்து விட்டு இங்குள்ளவர்களை நோண்டலாம்.

நாம் இன்று பல பல்வேறு பகுத்தறிவு பிரச்சாரங்களை செய்து வருகிறோம். பகுத்தறிவின் அடிப்படையில் ஒரு சமூகத்தை கட்டமைக்க முயற்சித்து வருகிறோம்.

கோவில் திருவிழாவில் அதிக அளவில் கூட்டம் செல்வது விளையாட்டு மைதானங்களுக்கு செல்வது இது உண்மையிலேயே ஒரு நாகரிகமான சமூகத்திற்கு நல்ல அடையாளமாக என்னால் பார்க்க முடியாது.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது நீ பார்வையாளனாக இருக்காதே பங்கேற்பாளனாக இரு. நேற்று அங்கு கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் கிரிக்கெட் மட்டையை பிடித்து பார்த்து இருப்பார்கள் என்று எனக்கு தெரியாது.

நான் அரசை பற்றி பேசவில்லை. இது எல்லா இடங்களிலும் நடந்து வருகிறது. இது என்னுடைய அன்பான வேண்டுகோள் பொது இடங்களில் கூடும் போது பொதுமக்கள் நமது அறிவை பயன்படுத்தி தள்ளி உந்தி சென்று நெருக்கடியை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது எனது அன்பான வேண்டுகோள்.

இந்திய கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவது குறித்து பதில் கூற நான் விரும்பவில்லை. நமது தமிழக முதல்வர் அருமையான ஒரு கூட்டணியை நடத்தி கொண்டு இருக்கிறார் .இதில் யாரை சேர்க்கணும் அதிகமா சேர்க்கணுமா இல்லையா என்பதை அவர் முடிவெடுப்பார் .

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா? என்ற கேள்விக்கு அருகில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார் என்று கூறி சென்றார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!