ஆறுமுக சாமி ஆணையம் தடை நீக்கப்படுமா? அமைச்சர் சிவி சண்முகம் கூறிய தகவல்!!

23 September 2020, 2:39 pm
CV Shanmugam- updatenews360
Quick Share

விழுப்புரம் : ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுக சாமி ஆணையம் தடை நீக்க தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு திட்டங்கள் வாயிலாக தமிழக அரசானது வங்கி கடன், நலத்திட்ட உதவிகள் ஆகியவை கள் மூலம் உதவிகளை செய்து வருகிறது. அதன் படி இன்று விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.

அவ்விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் கலந்துக்கொண்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம், கோலியனூர், விக்கிரவாண்டி, காணை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 23 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2 கோடியே 10 லட்சம் மதிப்பிலான நேரடி கடன் உதவிகளையும், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாசிங், உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த தடையை நீக்குவதற்கான தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்று அல்லது நாளையோ விசாரணைக்கு வருவதாக தெரிவித்தார்.