என்னது நாகரிகம் இல்லையா? தமிழன் நாக்கை அறுத்துவிடுவான் : அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2025, 11:57 am

எங்களைப் பார்த்து நாகரிகம் அற்றவர்கள் என்று பேசுகிறீர்கள் நாக்கை அறுத்து விடுவான் டா தமிழன் என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழக அரசை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர் 1958ல் இந்தியை திணித்தார்கள் அப்போது எதிர்த்தோம் பெரியார் அண்ணா இருந்தார்கள் 1965இல் மீண்டும் கொண்டு வந்தார்கள் அப்போதும் நமது வேகத்தை பார்த்து வாபஸ் வாங்கி விட்டார்கள் அப்பொழுது கருணாநிதி இருந்தார்.

இதையும் படியுங்க : இருப்பைக் காட்டிக் கொள்கிறாரா செந்தில் பாலாஜி? அண்ணாமலை குறித்து அன்றும், இன்றும் ட்விஸ்ட் பேச்சு!

இப்போது அவருடைய மகன் சின்ன பையன் இருக்கிறான் திணித்து பார்ப்போம் என்ன செய்வான் என நினைத்து இந்தியை திணிக்க பார்க்கிறார்கள் இந்தியாவிலேயே மத்திய அமைச்சரை பார்த்து பார்த்து பேசுங்கள் என கூறிய ஒரே ஆண்மகன் நமது தளபதி தான்.

எங்களைப் பார்த்தா நாகரிகம் அற்றவர்கள் என பேசுகிறார்கள் நாக்கை எடுத்து விடுவான் டா தமிழன் அண்ணா உரசி பார்த்து செல்வார் கருணாநிதி எச்சரிக்கை செய்வார் தளபதி பழக்கம் நாக்கை அறுத்து விடுவோம் என்பது.

அப்போது ராஜாஜி இந்தி கொண்டு வந்தார் இன்னொரு பக்கம் குலக்கல்வியை கொண்டு வந்தார்கள் அவை உள்ளிட்ட மூன்று பிரச்சனைகளுக்கு அப்போது மும்முனை பிரச்சனை முன்வைத்து போராட்டத்தை கையில் எடுத்தார்கள் அப்பொழுது அண்ணாவும் பெரியாரும் வெவ்வேறு கட்சியில் இருந்தாலும் இணைந்து போராடினார்கள்.

அதற்குப் பிறகு தளபதியின் காலத்தில் தான் தற்போது மும்முனை போராட்டம் நிதி கொடுக்காததற்கும் தொகுதி மறு சீரமைக்கும் இந்தி திணிபுக்கும் என தற்போது மும்மூனை போராட்டத்தை தளபதி ஆரம்பித்துள்ளார்

அது மட்டுமல்ல இந்தியாவிலேயே முதல்முறையாக அண்டை மாநிலங்களுக்கு தூதுவர்களை அனுப்புகிறார் மற்ற நாடுகளுக்கு தூதுவர்களை அனுப்புவது போன்ற தைரியம் நமது தளபதிக்கு மட்டும் தான் உள்ளது அதனால் தான் நம் மீது கை வைக்க பயப்படுகிறார்கள்

Minister duraimurugan Warns to Central Minister

ஆனால் எங்க ஆட்சியை கலைத்து விடுவான் என நினைக்காதீர்கள் அது முடியவே முடியாது அதற்கு சட்டம் வந்துவிட்டது இல்லையேன்றால் இந்நேரம் கலைத்திருப்பான் நேர்மையா ஆளனும் என நகலைத்திருப்பார்கள். குளவி கூண்டில் கை வைத்தது போல் ஆக்கி விடாதீர்கள் என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?