இருட்டிலும், இக்கட்டிலும் மாட்டிக்கொண்டிருப்பது இபிஎஸ்தான் : அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2025, 1:18 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக பூத் முகவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பு தனது காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள இல்லத்தில் இருந்து தமிழக நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் செல்வதற்கு முன் செய்தியாளரை சந்தித்தார்.

இதையும் படியுங்க: காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல இதயமும் கெட்டுவிட்டது… சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் ஆவேசம்!

அப்போது அவரிடம், முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து விட்டும் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை என்று எதிர் கட்சி தலைவர் குற்றம் சாட்டியுள்ளாரே, என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவருக்கு என்ன தெரியும். எல்லாம் போயாச்சு. எதிர்க்கட்சித் தலைவர் எங்களை பாராட்டிக் கொண்டா இருப்பார். போய் அவரை பார்க்கச் சொல்லுங்கள்”, என்றார்.

இருளை அகற்றி தமிழகத்தை ஒளி வீசச் செய்வதே என்னுடைய தீராத ஆசை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளாரே என கேட்டதற்கு, இருட்டில் மாட்டிக் கொண்டிருப்பது, இக்கட்டில் மாட்டிக் கொண்டிருப்பது இரண்டுமே எடப்பாடி பழனிச்சாமி தான் என தெரிவித்தார்.

தொடர்ந்து என்கவுண்டரை ஆதரிக்கும் பொதுமக்கள் இந்த நிலை பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் என்றும், சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி காவல்துறை சித்திரவதைகளை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என சண்முகம் கேட்டுக்கொண்டார்.

  • consumer commission notice to mahesh babu நில மோசடி புகாரில் சிக்கிய மகேஷ் பாபு? நுகர்வோர் ஆணையத்தில் இருந்து பறந்த நோட்டீஸ்!
  • Leave a Reply