“பல்லு போன”.. ரஜினி பற்றி பேசிய நகைச்சுவையை பகைச்சுவையா யூஸ் பண்ணாதீங்கப்பா.. ஜகா வாங்கிய துரைமுருகன்..!

Author: Vignesh
26 August 2024, 1:45 pm

வேலூர் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி போய் பல் விழுந்து, தாடி வளர்ந்து, சாகிற நிலையில் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை மறந்து விட்டு ஏதோ பேசுகிறார் என்று ரஜினிகாந்த் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட நாள் நண்பர் எனவும், அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்கள் நட்பு என்றும் தொடரும் என்று பேசி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன் எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும் போல் நண்பர்களாகவே இருப்போம் என்று அமைச்சர் துரைமுருகன் தற்போது பேசியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!