அமைச்சர் எ.வ. வேலு மகன் கார் விபத்தில் சிக்கினார்.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2024, 5:28 pm

அமைச்சர் எ.வ. வேலு மகன் கார் விபத்தில் சிக்கினார்.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

திருவண்ணாமலை ஏந்தன் பைபாஸ் ரோட்டில் இன்று அமைச்சர் எவ வேலுவின் மகன் கம்பன் காரில் சென்று கொண்டிருந்தார். எவ வேலுவுக்கு சொந்தமான அருணை கல்லூரியில் இருந்து கம்பன் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைபாஸ் சாலை சந்திப்பில் அவரது காரும், வேட்டவலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற இன்னொரு காரும் திடீரென்று மோதியது.

இதில் 2 கார்களும் சேதமடைந்தனர். மேலும் அதில் பயணித்தவர்கள் காயமடைந்தனர். குறிப்பாக கம்பன் பயணித்த காரில் அவரும், அவரது டிரைவரும் இருந்த நிலையில் இருவரும் காயமடைந்தனர்.

மேலும் படிக்க: சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டாஸ்.. இனி ஒரு வருடம் வெளியே வர முடியாது?!!

இதையடுத்த உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை.

விபத்து நடந்த இடத்தில் எவ வேலு பயணித்த காரின் ஒரு டயர் வெடித்து இருந்தது. இந்த டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதா? இல்லாவிட்டால் கார் விபத்து நடந்த பிறகு டயர் வெடித்ததா? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 321

    0

    0