எம்.ஜி.ஆர் போல மாதிரிகளை உருவாக்கலாம், ஆனால் யாரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது : அமைச்சர் பேட்டி!!

6 September 2020, 3:06 pm
Minister Kadamboor - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : எம்.ஜீ.ஆர் போல சித்தரித்து படம் போடுவதால் எல்லோரும் எம்.ஜி. ஆர் ஆக முடியாது என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துரை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றுது. இதில் திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சியில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து அத்தைக்கொண்டான் கோமதி நகரில் உள்ள சங்கரகோமதி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவிலும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கொரோனா ஆய்வு பணிக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 22ந்து தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார் என்றும், எம்.ஜி.ஆர் போல சித்தரித்து படம் போடுவதால் எல்லோரும் எம்.ஜி.ஆராக முடியாது என்றும், எம்.ஜி.ஆர் இன்றைக்கு மக்கள் உள்ளங்களில் அழிக்க முடியாத சக்தியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.ஆகையால் தான் எம்.ஜி.ஆர் போல மக்கள் எண்ண வேண்டும் என்பதற்காக போஸ்டர் அடித்து வருகின்றனர். அதிலும் எம்.ஜி.ஆர் வாழ்ந்து வருகிறார்.

எம்.ஜி.ஆர் மறைந்து 32 ஆண்டுகளுக்கு பின்னரும், அவர் தொடங்கி இயக்கம் தொடர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறது,ஆட்சியிலும் இருக்கிறது. எம்.ஜி.ஆர் போல மாதிரிகளை உருவாக்கலாம் தவிர யாரூம் எம்.ஜி.ஆராக முடியாது.

கொரோனா பரவல் தொடங்கியது முதல் அரசின் நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் குறை கூறுகிறார் தவிர ஆக்கபூர்வமான ஆலோசனை கூறவில்லை. அவருக்கு யோசனை சொல்ல தெரியாது, அவர் மீது வஞ்சம் இல்லை, அவருக்கு தெரிந்தால் தானே சொல்ல முடியும், அவருக்கு அனுபவமும் இல்லை.மக்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக மு.க.ஸ்டாலின் ஏதோ சொல்லி வருகிறார். அவர் சொல்வதை போன்ற இறப்பு சதவீதம் இல்லை.

தமிழகத்தில் அதிமுக தான் பெரிய சக்தி என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், தேர்தல் வரும் நேரத்தில் டெபாசீட் வாங்க முடியாத கட்சிகள் கூட நாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம், நாங்கள் தான் முதல்வர் என்று சொல்வார்கள்,தொகுதியில் 2 ஆயிரம் வாக்கு கூட வாங்க முடியாதவர்கள் கூட நாங்கள் தான் முதல்வர் என்று கூறி தேர்தலை சந்திப்பது வழக்கம் என்றும்,2021 தேர்தல் வருவதற்கு ஆயிரம் பேர் நாங்கள் தான் முதல்வர் என்று கூறி வருவார்கள், அது நகைச்சுவையாக தான் இருக்கும்,2021ல் ஆட்சியை பிடிக்கப்போவது அதிமுக தான், அதிமுக முதல்வர் தான் ஆட்சி செய்ய போகிறார்.ஆகையால் தான் இளைஞர்கள், படித்தவர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். காலத்தினால் அழிக்க முடியாத சக்தியாக அதிமுக இருக்கிறது. என்றார்.

Views: - 0

0

0