நாளை மாலை சேலம் வரும் CM ஸ்டாலின்… சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு ; அமைச்சர் கேஎன் நேரு..!!

Author: Babu Lakshmanan
19 January 2024, 5:04 pm

சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு செய்தியாளரிடம் தெரிவித்தார்.

திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு நாளை மறுதினம் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. மாநாடு ஏற்பாடுகள் குறித்து திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே என் நேரு சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியில் அவர் கூறும் போது :- சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டு பந்தலில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட உள்ளது. மாநாட்டின் பந்தலின் உள்ளே இரண்டரை லட்சம் பேரும் மாநாடு சுற்றியுள்ள இடங்களில் 2 1/2 லட்சம் பேரும் என ஐந்து லட்சம் பேர் பங்கேற்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.

மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு, அதற்கான பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் மதியம் உணவு வழங்கிட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் மாநாட்டு திடலில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

சேலம் திமுக இளைஞரரை மாநாட்டில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் நாளை மாலை 5 மணிக்கு விமானத்தில் சேலம் வருகை தர உள்ளார். அங்கிருந்து மாநாட்டு பந்தலுக்கு வருகை தரும் முதல்வர் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட சுடரை வாங்கி, சுடரை ஏற்றி வைக்க உள்ளார். நீட் தேர்வு ஒழிப்புக்காக நடைபெற்று வரும் இருசக்கர வாகன பேரணியையும் முதலமைச்சர் பார்வையிட உள்ளார்.

இதனை அடுத்து 1500 டிரோன்கள் பங்கேற்புடன் பிரம்மாண்ட ட்ரோன் ஷோ முதலமைச்சர் முன்னிலையில் நடக்க உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் முதலமைச்சர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்க உள்ளார். மாநாட்டு பந்தலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைக்க உள்ளார். கேஎன் நேரு மாநாட்டினையொட்டி முக்கிய தலைவர்களின் சிலைகள் திறக்கப்பட உள்ளது.

மாநாடு இளைஞரணி செயலாளர் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிவதுடன் தொடங்குகிறது. மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட திமுக முன்னணி தலைவர்கள் பேச உள்ளனர். மாலையில் பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இளைஞரணி செயலாளர் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மாநாட்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த மாநாடாக சேலம் திமுக இளைஞர் அணி மாநாடு அமையும், என்றும் அமைச்சர் கே என் நேரு நம்பிக்கை தெரிவித்தார்.

பேட்டியின் போது திமுக மாவட்ட செயலாளர்கள் எஸ்ஆர் சிவலிங்கம், டி எம் செல்வகணபதி, ராஜேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!