அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி.. அண்ணாமலை போட்ட பரபரப்பு ட்வீட்!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 July 2023, 10:00 pm

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி பொறுப்பேற்றது. கடந்த 9 வருடங்களாக இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அதற்காக எதிர்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது போல, அடுத்ததாக அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை செய்தது.

மேலும் 13 மணி சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை விசாரணைக்காக அமைச்சர் பொன்முடியை நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 2024ம் ஆண்டு பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறும் போது நாம் எதிர்பார்க்கும் உண்மையான அரசியல் மாற்றம் இந்தியாவில் ஏற்படும்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!