தண்ணீரில் கால் வைக்க தயங்கிய அமைச்சர் ..! தூக்கிச் சென்ற மீனவர்களால் சர்ச்சை.. விளக்கமளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!!.

8 July 2021, 4:38 pm
Minister Anitha Radhakrishnan - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : பழவேற்காடு ஏரி முகத்துவாரத்திற்கு படகில் பயணித்து ஆய்வு செய்து கரை திரும்பிய மீன்வளத்துறை அமைச்சரை மீனவர்கள் சேர்ந்து தண்ணீரில் கால் நணையாதபடி அலேக்காக மகிழ்ச்சியில் தோளில் சுமந்தபடி தூக்கிச் சென்ற சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் கடலும் ஏரியும் இணையும் முகத்துவாரம் பகுதி மணல்மேடு ஆகி போனதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் வாழ்வாதாரம்
பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பழவேற்காடு ஏரியில் ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்களுடன் படகில் பயணித்து முகத்துவாரத்தை ஆய்வுசெய்து நிரந்தர முகத்துவாரம் மீன்பிடிதுறைமுகம் என மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அவர் உறுதி அளித்து கரை திரும்பினர்.

அப்போது அவரை வடக்கில் இருந்து கீழே இறங்கிய போது மகிழ்ச்சியில் இருந்த மீனவர்கள் இரண்டு பேர் அவரை தண்ணீரில் கால் நணையாதபடி அலேக்காக மகிழ்ச்சியில் தோளில் சுமந்தபடி தூக்கிச் சென்றனர். இந்த சம்பவத்தால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த நிலையில் யாரையும் சுமந்து செல்ல கூறவில்லை என்றும், இது வரை எந்த அமைச்சர்களும் அப்பகுதிக்கு வராததால், தான் வந்ததாக மகிழ்ச்சியில் தன்னை மீனவர்கள் தூக்கி சென்றதாக விளக்கமளித்துள்ளார்.

Views: - 163

0

0