கோவையில் ரூ.2.2 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

22 September 2020, 5:48 pm
Quick Share

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டலத்தில் ரூ.2 கோடியே 2 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டிலான வளர்ச்சிப்பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவங்கி வைத்தார்.

கோவை மாகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை துவக்கி வைத்தும், அதே பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.37.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் அமைச்சர். இதனை தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்க கூடிய சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

முன்னதாக ‘டர்ப் பேஸ் -2’ திட்டத்தில் இருந்து பாரதி நகர் பகுதியில் ரூ.34.71 லட்சம் மதிப்பீட்டிலும், பிருந்தாவன் சர்க்கிள் தெற்கு பகுதியில் ரூ.41.30 லட்சம் மதிப்பீட்டிலும் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையினை அமைச்சர் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, 93வது வார்டுக்குட்பட்ட திருநாவுக்கரசு நகர் பகுதியில் ரூ.46.47 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கும், மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.28.50 லட்சம் மதிப்பீட்டில் மாச்சம்பாளையம் பிரதான சாலை மற்றும் நல்லவரத கோனார் வீதி பகுதிகளுக்கு மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து அப்பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்க கூடிய சத்து மாத்திரைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, ‘டர்ப்’ திட்டத்திலிருந்து மணிகண்டன் நகர் பகுதியில் ரூ.41.80 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையினையும் என மொத்தம் ரூ.2 கோடியே 2 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை செய்து, ரூ.37 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளை அமைச்சர் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன்,துணை ஆணையர் மதுராந்தகி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Views: - 2

0

0